Rock Fort Times
Online News

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் 26- ம் தேதி திறப்பு- சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்…!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.இன்று(22-02-2024) காலை கேள்வி நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது.தலைவர் கலைஞர் நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும், தலைவர் கலைஞர் நினைவிடமும் வருகிற 26 ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம். முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்