Rock Fort Times
Online News

அதிமுகவுடன் அமமுக இணையுமா? திருச்சியில் டிடிவி தினகரன் காரசார பேட்டி!

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் இருந்தவர் துப்பாக்கி சூட்டில் காவல்துறையினர் சுட்டு இறந்தது என்பது தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திமுகவை சேர்ந்த மூன்று பேர் கைதாகி உள்ளனர். இந்த நேரத்தில் காவல் துறையினர் அதில் ஒரு கைதியை என்கவுண்டர் செய்துள்ளது பல சந்தேகங்களை கிளப்புகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்கிற பதவியை புரட்சித்தலைவர் மாதிரியோ, ஜெயலலிதா மாதிரியே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு வரவில்லை. அங்கு எந்த தேர்தலும் நடக்கவில்லை.அது நியமனம் தான். கட்சியை கபளீகரம் செய்து வைத்துள்ளார். பாவம் தொண்டர்கள். இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வேறு வழியின்றி இருப்பவர்கள், அவர் பொதுச் செயலாளராக செயல்படுகிறார், அவர் சொல்லி யாரும் கேட்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் எந்த சூழ்நிலையில், எந்த காரணத்திற்காக தொடங்கினோமோ அந்த காரணங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு சுயநல நபரிடம், ஒரு பதவி வெறி, ஒரு துரோக சிந்தனை உள்ளவரிடம் அதிமுக கட்சி இன்று மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த கட்சியில் நாங்கள் இணைவோம் என கேட்கிற கேள்வியே தவறு. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து தமிழகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இன்றைக்கு எங்களால் தேர்தலில் வெற்றி அடைய முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுடைய லட்சிய பயணம் என்றைக்கும் தொடரும். வருங்காலத்தில் உறுதியாக நாங்கள் வென்றெடுத்து ஜெயலலிதாவின் லட்சியங்களை தமிழகத்தில் கொண்டு செல்வோம். எங்களின் இறுதி சுவாசம் உள்ளவரை அதற்காக போராடுவோம். தூங்குவது போல் நடிப்பவர்களை, சுயநலத்தில் இருப்பவர்களை, பதவி வெறி பிடித்தவர்களை, பணத்திமிரில் இருப்பவர்களை, அதிகாரம் இருந்த காரணத்தினால் பணத்திமிரால் கட்சியை கபளீகரம் செய்து வைத்திருக்கிற தைரியத்தில் உள்ளவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு நியாயமானதை கேட்டு பெறலாம். தமிழக முதல்வரால் எளிதாக இதற்கு தீர்வு காண முடியும். அவர்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்திற்கு நியாயமானதை பெற்று தர முடியும்.
அதற்கு தானே கூட்டணி வைத்துள்ளார்கள். இங்கு வெற்றி பெறுவதற்காகவும்,தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் இந்த கூட்டணி இருக்கிறது. மக்கள் கவனித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி பேசி தடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீரை பெற்று தருவது ஸ்டாலின் அவர்களின் தலையாய கடமை. போதை துறையை வைத்துள்ளவர் ஸ்டாலின். சம்பந்தமே இல்லாமல் மாவட்ட ஆட்சியரையும், எஸ்.பிஐயும் பணி மாறுதல் செய்கிறார். ஆனால், அவர்தான் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.

போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது. அது ஆளுங்கட்சி துணையுடன் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சியில் போதை கலாச்சாரம் பெருகி, இளைஞர்கள் எல்லாம் வேலை வாய்ப்பு இல்லாமல் போதை பொருட்களுக்கு அடிமையாகி, கூலிப்படைகளாக மாறி வருகிறார்கள். அதனால் தான் தினமும் 2,3 கொலை நடைபெறுகிறது. இதற்கெல்லாம் முதலமைச்சர் வருகின்ற தேர்தலிலாவது பதில் சொல்வாரா? வருகிற 2026ம் ஆண்டு நிச்சயம் பெரிய மாற்றங்கள் நிகழும்.இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார். பேட்டியின் போது தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன்.மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன்,கலைச்செல்வன்,மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,ராஜ ராமநாதன், நாகநாதர் சிவகுமார், டோல்கேட் கதிரவன், தன்சிங், வேதாத்திரி நகர் பாலு, லதா, தருண், கல்நாயக் சதீஷ்,உமாபதி, உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்