திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையின் போக்கினை கண்டித்தும், மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், உயிர்காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஹோமியோ மருத்துவத்தை தொடங்க வேண்டும், பொன்மலை மருத்துவமனையில் எக்கோ, டி.எம்.டி. ஸ்கேன் போன்ற மருத்துவ கருவிகள் கொண்டு வர வேண்டும், வெளியில் செய்யப்படும் ரத்த பரிசோதனைக்கான செலவை மருத்துவமனை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் சார்பில் இன்று ( 01-08-2023 ) பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தட்சிண ரயில்வே பென்சனர் சங்க கோட்ட பொருளாளர் தணிகாசலம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மத்திய சங்க நிர்வாகி மகேந்திரன், கோட்ட செயலாளர் மனோகரன், கோட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் தெய்வநாயகசாமி, ரமேஷ், கணேசன், ராஜகோபால், தயாநிதி, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.