Rock Fort Times
Online News

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன. தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் நடந்த ஒரு மீட்புப் பணிகளை இரண்டாவது நாளாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ் கூறுகையில் கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது.  ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது விபத்து நடந்த இடத்தில் வரும் புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் துவங்க திட்டமிட்டு உள்ளோம் மேலும் ஒடிசா ரயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடைபெற்றது என கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்