
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் புகழ் செய்தியாளா்களை சந்தித்தாா். புகழ் பேசுகையில் தற்போது அதிக படங்களில் நடித்து வருவதாகவும், விரைவில் “அவன் அடித்த அயோத்தி“ உட்பட படங்கள் வெளி வருவதாகவும், மீண்டும் தன்னை அடையாளப்படுத்திய குக் வித் கோமாளி அடுத்த நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு கதையின்படி நடிப்பதே சிறந்தது என்றாா். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் 5 மணிக்கு எழுந்து ஜிம்முக்கு சென்று உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பது சிறந்தது என்று கூறினார்.இந்த சந்திப்பின் போது பிரபல பாடி பில்டா் உலக சாம்பியன் ராஜேந்திர மணி உடனிருந்தார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.