Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…!

திருச்சி மாநகராட்சி சார்பில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (07-09-2026) மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் கொடுத்தார்கள். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா தனக்கோடி, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்