திருச்சியில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றிய 7 பேர் ஆய்வாளர்களாக பணி உயர்வு பெற்றுள்ளனர். திருச்சி மாநகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக மோகன் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றிய ராஜீவ்காந்தி, சதீஷ்குமார், மாரிமுத்து ஆகியோரும், திருச்சி புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஜெயேந்திரசரஸ்வதி, அன்புசெல்வன் ஆகியோரும் ஆய்வாளர்களாக பணி உயர்வு பெற்று மத்திய மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.