கடலூர் மாவட்ட மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் பண்ருட்டி பகுதிக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில் இன்று ( 19.06.2023 ) காலை 10 மணி அளவில் கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும் பட்டாம்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு தனியார் பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்ட 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோா் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்ற 7 பேர் பாிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.