Rock Fort Times
Online News

கடல் நீருக்குள் சென்று துவாரகா கோவிலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி…(வீடியோ இணைப்பு)

குஜராத்தில் இன்று(பிப்.25) பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு கடலுக்கடியில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா கோவிலில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் சென்று பிரார்த்தனை செய்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பூலோகத்திலிருந்து புறப்பட்டபோது அவர் ஆட்சி புரிந்த துவாரகா மாநகரம் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், துவாரகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, துவாரகா என்றதொரு நகரம் நீருக்கடியில் மூழ்கியிருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் அகழ்வாராய்ச்சி ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்(டிவிட்டர்) தள பதிவில், நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகுந்ததொரு தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மிக மகத்துவம் நிறைந்த பண்டைய காலத்துடன் நான் தொடர்பிலிருப்பது போல உணர்ந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், குஜராத்தில் ஓகா நிலப்பரப்பையும், துவாரகா தீவையும் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் ஓகா துறைமுகத்திற்கு அருகிலுள்ள தீவான பேய்ட் துவாரகாவில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கிருஷ்ணர் கோயிலிலும் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்