திருச்சி மாவட்டம் சூரக்குடிபட்டியில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி பயணிகளுடன் அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகே அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் வேன் இரண்டும் அருகருகே வந்ததால் பஸ் மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில், பஸ்ஸின் பின்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் பஸ்ஸில் அதிக கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.