இந்தியாவில் முதல்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை- தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!
கொல்கத்தாவில் ஹவுரா மைதான்- எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(06-03-2024) தொடங்கி வைத்தார். மேற்கு வங்காளத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கொல்கத்தா கிழக்கு- மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான்- எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதற்கான தொலைவு 4.8 கிலோமீட்டர். இதற்காக ஹூக்ளி ஆற்றை கடக்க 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 ஆயிரத்து 965 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நீருக்கடியில் பயணிக்கும் முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.