Rock Fort Times
Online News

தமிழகத்தில் மின்வெட்டு: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு…!

தமிழகத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, திருச்சி. நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின்வெட்டு தொடர்பான புகார்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும், மின் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மின்கட்டமைப்பை வலுப்படுத்துவது, மின் தேவையை பூர்த்தி செய்வது, நுகர்வோர் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரிய தலைவர் அருண்ராய், பசுமை எரிசக்தி கழகம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து மின்னகம், மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்