Rock Fort Times
Online News

வருகிற ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: நிதி அமைச்சகம் அறிவிப்பு…!

வங்கி வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளை சமமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 28- ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 2.50 லட்சம் பேர் பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது. மாதத்தின் 4-வது சனிக்கிழமையான செப்.26 மற்றும் ஞாயிறு விடுமுறை இத்துடன் ஸ்டிரைக் காரணமாக 3 நாட்கள் வங்கிகள் மூடப்படும் பட்சத்தில் 5 நாட்கள் வரை வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் செப்டம்பர் 27 ஞாயிறன்று வழக்கம்போல் செயல்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்