தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை(14-01-2025) செவ்வாய்க்கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி புதன்கிழமை மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகும். 16ம் தேதி உழவர் திருநாள். இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 17-ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், 18 மற்றும் 19ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால் 6 நாட்கள் தொடர் விடுமுறை.
இதன் காரணமாக வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி உள்ளவர்கள், படிப்புக்காக வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று (ஜன.12) மட்டும் தமிழகம் முழுவதும், ஒரே நாளில் சிறப்பு பேருந்துகளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சொந்த ஊர் செல்வதை மக்கள் விரும்புகின்றனர். இதனால் சொந்த ஊர் சென்ற பயணிகள் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.