பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இன்று (மே 13)கோவை மகளிர் நீதிமன்றத்தில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு குறித்து சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறுகையில், மேல்முறையீடு சென்றாலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு
தலா 5 ஆயுள் தண்டனையும், சதீசுக்கு 3 ஆயுள் தண்டனையும், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஹரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்றால் ஒரு ஆயுள் தண்டனையோ, 5 ஆயுள் தண்டனையோ ஒன்றுதான் என்றும் விளக்கம் அளித்தார்.

Comments are closed.