அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வந்தார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவில் கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு, திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று (மே 24) மாலை திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிலையில் டிடிவி தினகரனை வரவேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல் முன்பு கலெக்டர் அலுவலக சாலையிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று திடீரென்று போலீசார் தனியார் ஓட்டல் முன்பு டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று அமமுக நிர்வாகிகளியிடம் கூறியுள்ளனர். அதற்கு அமமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தலைமையில் நிர்வாகிகள் தன்சிங், வேதாத்திரி நகர் பாலு, உறையூர் கல்நாயக் சதீஷ்,உமாபதி, தருண்,கல்லணை குணா,பிரகாஷ் உள்பட அமமுக நிர்வாகிகள் தனியார் ஓட்டல் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசாரின் அறிவுரைப்படி நிகழ்ச்சி முடிந்த ஒரே ஒரு பேனர் மட்டும் மட்டும் அகற்றிக் கொள்ளப்பட்டது.
Comments are closed.