Rock Fort Times
Online News

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – பா.ம.க.எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்தது. இதில், இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவை ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். இந்தநிலையில் இந்த விழாவில் இருந்து பா.ம.க. எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக, விழாவுக்கு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தது. பின்னர், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது நினைவுகூரத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்