Rock Fort Times
Online News

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…!

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞரின் திருவுருவ சிலைக்கும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் கமல் முஸ்தபா, ராம்குமார், நாகராஜ், இளங்கோ, கனகராஜ், தொமுச குணசேகர் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்