Rock Fort Times
Online News

திருச்சி, மத்திய மண்டல அஞ்சல் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் முகாம் ஜூலை 30ம் தேதி நடக்கிறது!

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவா் அலுவலகத்தில் ஜூலை30ம் தேதி மண்டல அளவிலான  ஓய்வூதியர்களுக்கான குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக  திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளதாவது: –
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் தலைமை அலுவலகத்தில் ஜூலை 30-ந் தேதி காலை 11 மணிக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இந்த குறைகள் குறித்த கடிதங்கள், ஜூலை 16-ந் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வூ பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், ரயில்வே துறையில்பணியாற்றி ஓய்வூதியத்தை அஞ்சல் துறை மூலம் பெறுபவர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும்.  கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து, அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை  கணக்கு அதிகாரி, அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி 620001என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.  அஞ்சல் உறை மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2024 என குறிப்பிட வேண்டும். குறைகளை தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பக்கூடாது. சாதாரண தபால், பதிவு,விரைவு தபால் மூலம் அனுப்பலாம்.  நேரில் வர முடியாதவர்களுக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமை காணொளி, தொலைபேசி உரையாடல்மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களின் வீட்டு முகவரி, செல்போன், அருகில் உள்ள அஞ்சலக அலுவலக முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்