Rock Fort Times
Online News

கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் -மத்திய அரசு அனுமதி..

முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு. கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. பேனா நினைவுச் சின்னம் தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்