Rock Fort Times
Online News

 வெளிநாட்டு கரன்சியுடன் பயணி சிக்கினார்..

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர், தனது உடையில் மறைத்து கடத்திச் செல்ல முயன்ற ரூ.13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்