காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாடார் சங்கங்கள் சார்பில் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!
இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வித்திருவிழா திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, இந்திய நாடார் பேரவை மாநில அமைப்பு செயலாளர் அய்யனார் பொன்ராஜ், தலைமை செயலாளர் ஆழ்வார்தோப்பு ஜெயராஜ், பொதுச்செயலாளர் ராஜ்குமார், முதன்மை செயலாளர் மாதேஸ்வரன், மாநில தொழில்துறை இயக்குனர் கமல்தாஸ், மண்டல தலைவர் ஜான்வெஸ்லி, மாவட்ட தலைவர் எஸ்.பி.முருகன், மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ், மாநகர தலைவர் செல்வராஜ் மற்றும் பாலக்கரை, எடமலைப்பட்டிபுதூர் நாடார் சங்க நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக “காமராஜரின் சாதனைகள்” என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Comments are closed.