தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வி.சி.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், குருஅன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, பெல் சந்திரசேகரன், வழக்கறிஞர்கள் பழனியப்பன், தீனா, ரகுநாத், சிறுத்தை சதீஷ், திலீபன் ரமேஷ், காட்டூர் பொன்னுசாமி, விடுதலை, முருகேசன், பீமநகர் செல்வம், ஜெயக்குமார், மகளிர் அணியினர் கஸ்தூரி, சுதா உட்பட பல கலந்து கொண்டனர்.
Comments are closed.