Rock Fort Times
Online News

திருச்சியில் நூதன மோசடி செல்போனுக்கு வந்த ஆஃபர் லிங்க் க்ளிக் செய்த உடன் பணம் அஃபேஸ் – (வீடியோ இணைப்பு )

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர், எழில் நகரை சேர்ந்தவர் மாபூப் கான்.இவர் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவரது செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் மாபூப் கான் 4999 ரூபாய் பெற்ற வெற்றியாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட மாபூப்கான் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு பணம் கிடைத்து விட்டது என மகிழ்ச்சி அடைந்தார்.அப்போது பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய லிங்கில் சில விவரங்கள் கேட்கப்பட்டன.

இறுதியாக அவரது GPay வின் ஆறு இலக்க ரகசிய எண் கேட்கப்பட்டது. மாபுக்கான் ரகசிய எண்ணை அழுத்தவே நொடியில் அவரது கனரா வங்கி கணக்கில் இருந்த 4999 ரூபாய் எடுக்கப்பட்டது. இதனை சற்று தாமதமாக புரிந்து கொண்ட மாபுக்கான், இது குறித்து வங்கி மற்றும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மோடியின் பெயரில் மோசடியில் ஈடுபடும் இந்த கும்பலிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் லிங்குகளை உடனடியாக டெலிட் செய்வது தான் நல்லது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்