2024 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்கியோவுக்கு 2024 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து அணுகுண்டில் இருந்து தப்பியவர்களின் அடிமட்ட இயக்கம் இது ஆகும். இந்த அமைப்பு ஹிபாகுஷா என்றும் அழைக்கப்படும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நிரூபித்ததற்காகவும் அமைதிப் பரிசைப் பெறுகிறது. மேலும் இந்த அமைப்பு, உலக நாடுகள் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்ற நிலைபாட்டை கொண்டுள்ளது. அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். எனவே இந்த நிறுவனத்தில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.