மணப்பாறை அருகே புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது புத்தாநத்தம் ஊராட்சி. தற்போது இந்த ஊராட்சி புத்தாநத்தம் ஊராட்சி, இடையபட்டி ஊராட்சி என இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊராட்சியை இரண்டாக பிரிக்கக் கூடாது என்று தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் மக்களின் எதிர்ப்பை மீறி தற்போது இரண்டாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சியை சரி சமமாக பிரிக்காமல் ஒரு தலைப்பட்சமாக பிரிக்கப்பட்டுள்ளது, ஊராட்சியை இரண்டாக பிரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு ஊராட்சி வளர்ச்சியும், மற்றொரு ஊராட்சி பின்னடைவையும் சந்திக்கும். கிராம மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும். அறிவிக்கும் நிதியிலும் பாரபட்சம் ஏற்படும். அரசு அறிவிக்கும் சலுகைகளிலும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று(03-01-2026) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.