அ.ம.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக என்.எஸ்.தருண், இளைஞர் பாசறை துணைத் தலைவராக பி.செந்தில்குமார் நியமனம்…!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச் செயலாளராக என்.எஸ்.தருண், மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளராக ஏ.கம்ருதீன், கழக இளைஞர் பாசறை துணைத் தலைவராக பி.செந்தில்குமார் ஆகியோர் இன்று(18-02-2026) முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு என்.எஸ்.தருண் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளராகவும், பி.செந்தில்குமார் திருச்சி மாநகர் மாவட்ட பொறியாளர் அணி செயலாளராகவும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்ட மூவரும் திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் பி.செந்தில்நாதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Comments are closed.