Rock Fort Times
Online News

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை..

வேலூர் கோர்ட் உத்தரவு..

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலகட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவியுடன் ஆஜரானார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்