Rock Fort Times
Online News

மணப்பறை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உதவித்தொகை..

அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரும் , திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில், தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகைகளை வழங்கினார். இதில் உயிரிழந்த, மணப்பாறை  உடையாப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஐயப்பன்,மணிகண்டன், ஆளிப்பட்டியைச் சேர்ந்த நாகரத்தினம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகள் உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்