வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் …
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு ...
திருச்சி தெற்கு மாவட்ட , கிழக்கு மாநகரம் பாலக்கரை பகுதி கழக செயல்வீரர்கள் கூட்டம் பாலக்கரையில் இன்று ( 24.05.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம். எங்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இந்த கூட்டத்தில் இரண்டு பெண்கள் மேடை ஏறி பேசியது இந்த கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பெருமையாக கருதுகிறேன். அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற தமிழக கல்வித்துறை அறிவிப்புக்கு கவிப்பேரரசு வைரமுத்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்ற வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். கழக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறாரோ அதை நாம் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். சட்டமன்றம், நம்ப பக்கம் வந்தது போல நாடாளுமன்றம் நம் பக்கம் வரவேண்டும். திருச்சி தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த ராஜு மற்றும் வட்ட செயலாளர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், திருச்சி கிழக்கு நகர செயலாளர் மதிவாணன் மற்றும் பகுதி கழக, வர்த்தக கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.