திருச்சி 38-வது வார்டில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி..
திருநாவுக்கரசர் எம்.பி திறந்து வைத்தார்..
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 38-ல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், கவுன்சிலர்கள் ரெக்ஸ், திமுக தாஜூதீன், கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய், முத்துக்கிருஷ்ணன், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் மஞ்சத்திடல் மணி, மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் அழகர், கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் சிவா வைத்தியநாதன், வார்டு தலைவர்கள் ஜாகீர் உசேன், நடராஜன், செபாஸ்டியன், அண்ணாதுரை, கோட்ட நிர்வாகிகள் கருப்பையா, வித்யாதரன், சேட்டு, அன்பு ஆறுமுகம், கோபிநாத் , பால்ராஐ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.