காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜரின் திரு உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Comments are closed.