Rock Fort Times
Online News

வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!

சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 05.09.2023) திருச்சி கோர்ட் அருகில் உள்ள வ.உ.சி. சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், வ.உ.சி.பேரவை நிர்வாகிகள் டாக்டா். செந்தில்,  ஹரிஹரன்  மற்றும் மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் , செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் :

வ. உ. சி. ஒரு அமைப்புக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்திய நாட்டிற்கு சொந்தமானவர். முதலமைச்சர் உத்தரவுப்படி, வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக துறையின் சார்பாக தயாரித்து வெளியிட்டு இருக்கின்றோம் என்று கூறினாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்