திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்தவர் குமரவேல். கடந்த 25-9-2019 அன்று இவருக்கும், இவரது தாய் சாந்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது குமரவேல், தாயின் தலையை கட்டிலில் மோதியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குமரவேலுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தங்கவேலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆனந்தன் வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கண்ட்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி, காவல் ஆய்வாளர்கள் நிக்சன், விஜயபாஸ்கர் மற்றும் போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வெகுவாக பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.