பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 10 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நீடித்தது.

நள்ளிரவில் நிறைவுபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
“நிறைவேற்ற முடியாத சில கோரிக்கைகளை மாற்று வழியில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இன்றும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் நல்ல தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவர் சனிக்கிழமை அடுத்த கட்ட ஆசிரியர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம் என்றும் ஆசிரியர்கள் முன்வைக்கின்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.