விழுப்புரம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில், 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில், மரக்காணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.