Rock Fort Times
Online News

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் மிஸ்ஸிங்…!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை மேற்பார்வையிட்டு செய்து முடிப்பதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பெயர் எந்த மாவட்டத்திலும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்