Rock Fort Times
Online News

மத்திய அரசின் மூன்று சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…!

மத்திய அரசு  3 குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து அமல்படுத்தியுள்ளது. அந்த சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல திருச்சியிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று(28-08-2024)
திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல் சங்க தலைவர் முல்லை சுரேஷ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில்   மூத்த வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் முத்துகிருஷ்ணன், சரவணன், செந்தில்நாதன், ஜெயராமன், திலீப் , அஸ்வின் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்