Rock Fort Times
Online News

நண்பா்களிடம் நுாதன முறையில் மோசடி

கோவையில் தனது நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் எண்களை பயன்படுத்தி பண மோசடி செய்த பிடெக் பட்டதாரியை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.கோவை சேர்ந்த வினோத்குமார்,ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய மூவரின் வங்கி கடன் அட்டைகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷனலிருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் எடுத்து மோசடி செய்துள்ளதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் இதில் தொடர்புடைய கோவைப்புதூரை சேர்ந்த பிடெக் பட்டதாரியான விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தி பண மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பணம் மோசடிக்கு பயன்படுத்திய மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், சிம் கார்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினா் விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்