கோவை காந்திபுரம் பகுதியில் இன்று காலை அரசு குளிர்சாதன சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்த போது அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தனியார் ஆம்னி பேருந்து முன் சென்ற அரசு பேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து அருகில் இருந்த தனியார் கடை கட்டிடத்தில் இடித்து நின்றது. இதனால் அக்கடைக்கு முன் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. இதில் இரு பேருந்து ஓட்டுநர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக இரண்டு பேருந்துகளிலும் கண்ணாடிகள் உடைந்தன. அப்பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.