திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கோட்டை கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு…!
திருச்சி பாலக்கரை யாதவர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வகையறா தேவஸ்தானத்தின் திருச்சி காந்தி மார்க்கெட் நெல்பேட்டையில் வீற்றிருக்கும் கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் சமஸ் பிரான்தெரு சப்பாணி கோவிலில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கிருஷ்ணருக்கு மகா சுதர்சன ஹோமம் நடந்தது .அதன் பின்னர் மாலை 6 மணிக்கு முதற்கால பூஜையும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால பூஜை மற்றும் மாலை 4 மணிக்கு அனைத்து சுவாமி விக்கிரகங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை)நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையுடன் பூர்ணாஹீதி, மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை புனித நீரூற்றி நடத்தி வைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் டிரஸ்டிகள் சேதுராமன், சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், பார்த்திபன், வெங்கடேசன், கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.