Rock Fort Times
Online News

மனைவி உள்பட 3 பேரை அாிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பியவர் விபத்தில் பலி…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர், சுந்தர் கணேஷ் ( வயது 42). தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி நித்யா (39). தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வீட்டை விற்க சுந்தர் முயற்சித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ், நித்யாவை அரிவாளால் வெட்டினார். இதில் நித்யா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதையடுத்து, வீட்டில் இருந்து காரில் ஏறி தப்பிச் சென்றார். பின்னர், பரிசுத்தம் நகரில் பால் விற்பனை மையம் நடத்தி வரும் கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35), கோபியை (32) சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார். இவர்கள் இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் தெரியவில்லை. பலத்த காயமடைந்த நித்யா, தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மனைவி மற்றும் மூன்று பேரை அரிவாளால் வெட்டிய சுந்தர்கணேஷ் காரில் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்ற காரின் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த 3 சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்