Rock Fort Times
Online News

‘கரூர் கம்பெனி… சங்கி அமைச்சர்… தமிழக சட்டமன்றத்தில் உதயநிதி-நிர்மல் குமார் வார்த்தை மோதல்…!

தமிழக சட்டமன்றத்தில் இன்று(21-08-2026) முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ”மின்வாரியத்தினுடைய தலைமை அலுவலகத்திலும், மற்ற பல இடங்களிலும்  18 ஹார்டு டிஸ்க்கள் காணாமல் போனது என்றார்கள். அவற்றில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் இருந்தன என்ற கருத்தை வெளியிட்டார்கள். மின்துறை அமைச்சர்  சொன்னது 18  ஹார்டு டிஸ்க்கள். எடுத்ததாக சொன்னது 38  ஹார்டு டிஸ்க்கள்.  மின்வாரியத்தில் 18 ஹார்ட் டிஸ்க் காணவில்லை என்றால் 38 கிடைக்கப் பெற்று இருக்கிறது” என்றார். அப்பொழுது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குறுக்கிட்டு பேசுகையில், ”கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகள் எல்லாம் ஒரே வரியில் விளக்க முடியாது. நமது ‘கரூர் கம்பெனி’… மன்னிக்கவும் கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இப்போதைய கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர்தான் 2021ல் இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார்” என்றார். ‘கரூர் கம்பெனி’ என்று அமைச்சர் சொன்னதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கோஷம் எழுப்பினர். உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘கம்பெனி என்று சொன்னதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டீர்களா? என
சபாநாயகரை நோக்கி கேள்வி எழுப்பியதோடு சங்கி அமைச்சர் மன்னிக்கவும், எரிசக்தித்துறை அமைச்சர்” என்றார். அப்பொழுது மீண்டும் எழுந்த அமைச்சர் நிர்மல்குமார், ”பாத்ரூமில் மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கு ஐந்து நிமிடமாகாது” என்றார். மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ”தமிழ்நாட்டில் பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு ஒரு அமைச்சர் வைத்திருக்கீர்களா? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றார். இவ்வாறு வார்த்தை மோதல் நீடித்தது. உடனே ‘கம்பெனி’ என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்