தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட, திமுக செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து தி.மு.க.கொடி ஏற்றப்பட்டது . பின்னர் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் காஜாமலை விஜி, போட்டோ கமால்,சேர்மன் துரைராஜ் ,தில்லை நகர் கண்ணன் மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ணபாரதி மற்றும் மாவட்ட, நகர, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.