முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இஇதையொட்டி திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 3 மணியளவில் காமராஜரின் பிறந்தநாள் விழா, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமையிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாவாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக இன்று ( 5-ந்தேதி )விழா மேடை அருகே பந்தல்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன். திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா, மாநில செயற்குழு உறுப்பினர்
தர்மராஜ், மாநிலச் செயலாளர் ஸ்ரீரங்கம் மதிவாணன், மாவட்ட பொருளாளர் கே.டி. தனபால், பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்ட மகளிர் அணி தலைவி அன்னபூரணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி மதிவாணன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் லட்சுமி நந்தகுமார், இளைஞரணி மாநில செயலாளர் கார்த்திக், மாணவர் அணி மாநில செயலாளர் மனோஜ், இளைஞரணி மாநில செயலாளர் சிவகணேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், மாணவரணி மாவட்ட தலைவர் கார்த்திக், புள்ளம்பாடி ஜே பி, மருதநாயகம், மண்ணச்சநல்லூர் சிவராமன், அனந்தராமன். விண்மதி விஜய், மணப்பாறை குமார், அம்மன் ஆறுமுகம், விஜயகுமார், செல்வகுமார், பொன்னரசன், தொட்டியம் மனோகர், சிவப்பிரகாசம் மூப்பனார், இளைஞரணி மாவட்ட செயலாளர் கமல், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.