திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை 15.03.2024 (வெள்ளிக்கிழமை) தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் தனியார்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கம்பெனிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18-க்கு மேல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு, நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறலாம். முகாமில் பங்கு பெற , விரும்புவோர் 15ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.