ஜூவல் ஒன் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் திருச்சி, அண்ணாமலை நகர் ஏ.ஜி.எஸ்.டவரில் இன்று(09-05-2025) உதயமானது. எமரால்டு நிர்வாக இயக்குனர் கே.ஸ்ரீனிவாசன், ஜூவல் ஒன் நிர்வாக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் தொழிலதிபர்களான ருரைதா காதர் மொய்தீன், சஃபானா அகமது ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஜூவல் ஒன் ஷோரூமின் தங்க நகைப்பிரிவை அகமது பிரதர்ஸ் சஃபானா அகமது, வைர நகைகளுக்கான பிரிவை ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன், வெள்ளி பொருட்களுக்கான பிரிவை குமரன் பிராப்பர்டீஸ் செல்லம் ஜெகன்நாத் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் பேசிய எமரால்ட் ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர் கே.ஸ்ரீனிவாசன்., கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகை உற்பத்தியில் சிறந்து விளங்கும் எமரால்ட் ஜூவல்லரியின் ரீ- டெய்ல் ஷோரூமான ஜூவல் ஒன்னில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற தனித்துவமான தங்க மற்றும் வைர நகைகள் கிடைக்கும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம்12 ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. அதன் அடுத்த கட்டமாக திருச்சியிலும் தடம் பதித்துள்ளோம். இனி அடுத்தடுத்து கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களிலும் புதிய ஷோரூம்கள் விரிவுபடுத்தபட இருக்கின்றன. தற்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ற அனைத்து விதமான நகைகளும் ஆன்டிக் ஜூவல்ஸூம் ஜூவல் ஒன் ஹோரூமில் கிடைக்கும். திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி என்றார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ஜூவல் ஒன் ஷோரூமின் மேலாளர்களான கே.பிலிப்ஸ், ஜெ. ஆனந்த்ராஜ், ஆர்.ரவிக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.