தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் பகுதி கழகம் சார்பில் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி கழக அதிமுக செயலாளர் டி.ஏ.எஸ்.கலீல் ரகுமான் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் என்.தியாகராஜன், கே.பி.கண்ணன், பி.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி காசிபாளையம் சுரேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.