Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?* இறுதிவாய்ப்பு வழங்கியது தேர்தல் ஆணையம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க மார்ச் 26-ந்தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்