தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம். புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Comments are closed.